வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:54 IST)

என்ன இப்படி பொறுப்பில்லாம ஆடுறான்… அப்பாவின் திட்டுக்கு அடுத்த போட்டியிலேயே பதிலளித்த கில்!

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

நியுசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த கில் மிக இளம் வயதில் இந்த சாதனையைப் படைத்த வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.

இந்த இரட்டை சதத்துக்கு முன்பாக நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதமடித்து 116 ரன்களில் அவுட்டானார். அந்த போட்டியிலேயே அவர் நின்று விளையாடி இருந்தால் இரட்டை சதம் அடித்திருக்கலாம். அதுபற்றி அவரின் தந்தை “அவர் எப்படி அவுட் ஆகிறார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், அவர் சதம் அடித்த பிறகும், இரட்டை சதம் அடிக்க அவருக்கு போதுமான நேரம் இருந்தது. இந்த ஆரம்பங்கள் அவருக்கு எல்லா நேரத்திலும் கிடைக்காது. அவர் எப்போது கற்றுக்கொள்வார்? ” என்று புலம்பித் தள்ளியிருந்தார்.

இதையடுத்து அடுத்த போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து கில் அவரின் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.