உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?
தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ்-ஐ வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்துள்ளது. சுமார் ரூ.7.44 லட்சம் கோடி மதிப்புள்ள இந்த மாபெரும் கையகப்படுத்தல் மூலம், வார்னர் பிரதர்ஸின் நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வார்னர் பிரதர்ஸுக்கு சொந்தமான அனைத்து ஸ்டூடியோக்கள், திரைப்பட உரிமைகள் மற்றும் அதன் ஓடிடி தளமான ஹெச்.பி.ஓ. மேக்ஸ் (HBO MAX) ஆகியவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு வருகின்றன. மேலும், வார்னர் பிரதர்ஸின் முக்கிய உள்ளடக்கங்களான டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், ஹாரி பாட்டர் சீரிஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற வெப் சீரிஸ் ஆகியவற்றின் உரிமைகளும் இனிமேல் நெட்ஃபிளிக்ஸ்க்கு சொந்தமாகும்.
ஒப்பந்த தொகையான ரூ.7.44 லட்சம் கோடியை, நெட்ஃபிளிக்ஸ் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வார்னர் பிரதர்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கும். இந்த நிகழ்வு உலக திரைத்துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த கையகப்படுத்துதலுக்கு பிறகு, நெட்ஃபிளிக்ஸ் உள்ளடக்க பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran