புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (14:27 IST)

தல பிறந்தநாளுக்கு கிடையாது.! தள்ளிப்போனது அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ்.!

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘பிங்க்’ பாலிவுட் பட ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’  படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்கிறார்.  
அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் டாப்ஸி வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும், வில்லன் கதாபாத்திரத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் , ஆண்ட்ரியா தைரங், ரங்கராஜ் பாண்டே, அபிராமி வெங்கடாஜலம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். 
 
சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அதுமட்டுமின்றி தல அஜித்தும் தனது பிறந்தநாளன்று இப்படம் வெளிவரவேண்டுமென்று விரும்பினாராம். ஆனால்,  தற்போது திடீர் திருப்பமாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. 
அதாவது , இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி சொன்ன தேதிக்குள் நிறைவடைய வாய்ப்புகள் மிகக்குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் திட்டமிட்டபடி இப்படம் மே 1ம் தேதி வெளி வர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை மே 23ம் தேதி வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.