திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (08:00 IST)

நெஞ்சம் மறப்பதில்லை புதிய டிரைவில் வெளியீடு? செல்வராகவன் தகவல்!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் புதிய டிரைலர் விரைவில் வெளியாகும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இப்போது செல்வராகவன் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படம் அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்ட் 2 என்று சொல்லப்படுகிறது. செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களும் ரி ரிலீஸ் ஆகியுள்ளன. இப்போது ரசிகர்கள் மத்தியில் செல்வராகவனுக்கு இருக்கும் கிரேசை பயன்படுத்திக் கொண்டு அவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட உள்ளாராம். இதையடுத்து படத்தை மார்ச் 5 ஆம் தேதி வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் புதிய டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.