வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:57 IST)

சூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்!

நடிகர் விஷாலுக்கு ஒரு அருமையான கதையை சொல்லி தேதிகள் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.

தமிழ் சினிமாவில் ஸ்மார்ட்டாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. தான் தயாரிக்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு படங்களை வெற்றியடைய வைக்கிறார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை அதிகளவில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே அந்த கதை விஷாலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து இயக்குனரை அவரிடம் அனுப்பி தேதிகள் கேட்டுள்ளார். ஆனால் கதை பிடித்தும் என்ன காரணத்தினாலோ அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் விஷால்.