1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (19:29 IST)

உருவாகிறதா தனுஷ் & நெல்சன் கூட்டணி?

நெல்சன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் மேல் கடுமையாக எழுந்தன. மேலும் அவர் இயக்க உள்ள ரஜினி படத்தில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ரஜினி 169 ஆவது படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினி படத்துக்குப் பிறகு நெல்சன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.