செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:44 IST)

’தளபதி 66’ படத்தில் நான் நடிக்கவில்லை: 90களின் நாயகன் விளக்கம்!

Mohan
தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தில் 90களின் நாயகன் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். 
 
தளபதி 66 திரைப்படத்தில் சரத்குமார் விஜய்யின் தந்தையாகவும், மோகன் விஜய்யின் சகோதரர் ஆகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மோகன், ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் மட்டுமே தற்போது நடித்து வருவதாகவும் இந்த படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படம் குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார் 
 
மேலும் தளபதி 66 படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் அந்த படத்தின் குழுவினர் என்னை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து தளபதி 66 திரைப்படத்தில் நடிகர் மோகன் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது