கவினின் ‘பிளடி பெக்கர்’ படுதோல்வி: தமிழக விநியோகிஸ்தருக்கு இத்தனை கோடி நஷ்டமா?
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது.
கவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பிளடி பெக்கர் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியான நிலையில், இந்த படத்தை 11 கோடி ரூபாய் கொடுத்து தமிழக ரிலீஸ் உரிமையை 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருந்தார்.
ஆனால் இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றதன் காரணமாக, பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. இப்போது வரை இந்த படத்திற்கு விநியோகஸ்தருக்கு வெறும் மூன்று கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், சுமார் 8 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே "பார்க்கிங்", "கருடன்", "மகாராஜா" போன்ற படங்களை விநியோகம் செய்து மிகப் பெரிய லாபம் அடைந்த பைவ் ஸ்டார் செந்தில், இந்த படத்தின் மூலம் மோசமான நஷ்டத்தை அடைந்துள்ளார் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Siva