வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (17:55 IST)

பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!

'பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார் 
 
இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது