செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (16:36 IST)

கதிர் படத்தை இயக்கும் புதுமுக இயக்குனர் – ஜனவரியில் படப்பிடிப்பு!

பிகில் படத்துக்குப் பின்னர் கதிர் நடிக்கும் புதுப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது.

மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமான கதிர், அதன் பிறகு கிருமி மற்றும் சிகை ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு பெரும்புகழை தேடி தந்தது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தான். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதால் இந்த ஜோடி கவனிக்கப்பட்ட ஒன்றாக மாறியது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை புதுமுக சாக் ஹாரிஸ் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படித்துவந்தவர். குறுகிய பட்ஜெட்டில் குறுகிய கால திரைப்படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் வெளியாக உள்ளது.