குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை: கலெக்டர் உத்தரவு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிரமாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் மிக கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட எந்த அருவியிலும் குளிப்பதற்கு அனுமதி இல்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அங்கு அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்ற உத்தரவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது