செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (18:34 IST)

நீ கிறிஸ்டின் பொண்ணு என்பதால் சும்மா விடுகிறேன்: விஜய் டிவி ஜாக்லினை மிரட்டிய மர்ம நபர்

விஜய் டிவி புகழ் ஜாக்குலினை அவரது பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டிய சம்பவம் குறித்து ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஊரடங்கு உத்தரவு காரணமாக தெருநாய்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவதால் ஜாக்குலின் தனது வீட்டின் கேட் முன் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அந்த தெரு நாய்களை பார்த்து குரைத்தது. தெரு நாய்களும் ஜாக்குலின் வளர்க்கும் நாய்களும் மாறி மாறி தொடர்ந்து குறைத்ததால் தொந்தரவாக கருதிய பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜாக்குலினை திட்டினர் 
 
இதனை அடுத்து தன் தவறை உணர்ந்து ஜாக்குலின் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இருப்பினும் ஜாக்லின் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ‘நீ கிறிஸ்டியன் பெண் என்பதால் உன்னை சுமா விடுகிறேன். இல்லை என்றால் வீடு புகுந்து அடித்திருப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்குலின் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஜாக்குலினின் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது