திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:07 IST)

சினிமாவில் ரீஎண்ட்ரி: ஓகே சொன்ன நஸ்ரியா!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, நேரம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலாமானர்.


 
 
தமிழில் ஒரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர், மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.
 
ஆனால், நஸ்ரியாவை நடிக்க வைக்க இயக்குனர்கள் பலர் முயன்று வந்தனர். நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசிலும் நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.
 
ஆனால், நஸ்ரியா சில கதைகளை கேட்டு நிராகரித்து வந்தார். தற்போது மலையாள பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்ன கதை நஸ்ரியாவுக்கு பிடித்துவிட்டதாம். 
 
இந்த படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுப்பார் என தெரிகிறது. இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளதாம்.
 
இயக்குனர் அஞ்சலி மேனன் மலையாளம் மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற பெங்களூர் டேஸ் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.