புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (20:14 IST)

ரீஎன்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா… சந்தோஷத்தில் ரசிகர்கள்

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா, மறுபடியும் நடிக்கத் தயாராகிவிட்டார்.


 

 
தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நஸ்ரியா. படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அழகான குறும்புக்காரி அவர். தமிழில் ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமான நஸ்ரியா, ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்கா’ ஆகிய படங்களில் நடித்தார்.
 
மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்டதால், நடிக்காமல் சில வருடங்களாக வீட்டிலேயே இருந்துவரும் நஸ்ரியா, மறுபடியும் நடிக்கும் முடிவை எடுத்துள்ளார். அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் ப்ருத்வி ராஜுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ள நஸ்ரியா, அடுத்து துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளம் – தமிழ்ப் படத்திலும் கமிட்டாகியுள்ளாராம்.