1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (13:26 IST)

நடிகை நஸ்ரியா கர்ப்பம்; வைரலாகும் செய்தி உண்மையா?

நடிகை நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது. நடிக்க வந்த வேகத்தில் நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் நஸ்ரியா. அதே வேகத்தில் மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை  திருமணம் செய்து கொண்டார்.

 
திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்கவில்லை. நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில்  கிசுகிசுக்கப்படுகிறது. நஸ்ரியா தனது கணவருடன் கொச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று  வந்துள்ளார். பஹத் மற்றும் நஸ்ரியாவின் குடும்பத்தார் கடந்த வாரம் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளனர். பஹத் பட விழாக்களுக்கு வராததற்கு பர்சனல் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையெல்லாம் வைத்து  பார்க்கும்போது நஸ்ரியா  கர்ப்பம் என்று வலைதளங்களில் பேசப்படுகிறது. 
 
இதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா இந்த தகவலை மறுத்துள்ளார். அதோடு தான் மருத்துவமனைக்கு செல்வது வேறொரு  காரணம் என்றும் கூறியுள்ளார்.