1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:16 IST)

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நஸ்ரியா - வைரல் வீடியோ!

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
 
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
 
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் நஸ்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் மனைவி அலீனா அல்போன்ஸ் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.