செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (09:02 IST)

வாத்தி கம்மிங்-க்கு ஆட்டம் போட்டு டிரெண்டாக்கி விட்ட அஸ்வின்!

விஜய் ரசிகர்கள் மீண்டும் #VaathiComing என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

 
இந்தியா - இங்கிலாந்த் டெஸ்ட் ஆட்டத்தின் இறுதியில், இந்தியா வெற்றி பெற உள்ள தருவாயில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் பிரபல மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் வருவது போல தோள்பட்டையை ஆடினார். அதை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகியோருடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் விஜய் ரசிகர்கள் மீண்டும் #VaathiComing என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.