திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (15:59 IST)

விஜய்யின் ’’வாத்தி கம்மிங்’’ பாடலுக்கு…இந்திய வீரர்கள் செம டான்ஸ்! வைரல் வீடியோ

பொங்கல் பண்டியையொட்டி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் அனிருத் இசையில் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், இப்பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும்  விளையாட்டு வீரர்கள் , ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பயிற்சிக்கு இடையே இந்திய கிரிக்கெட் வீர்கள் அஷ்வின், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.