புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (14:05 IST)

அட்லீயிடம் சிக்கிய பாட்ஷா 2: தலைவர் சேப்டர் இதோடு க்ளோஸ்!

தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த நடிகர்களுள் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு சிறந்த படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்டுத்தி இயக்குனர்களின் ராசியான நடிகராக பார்க்கப்பட்டார். அந்தவகையில் 1995ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளிவந்த "பாட்ஷா" படம் தமிழ் சினிமா வரலாற்றையே திசை திருப்பியது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த அந்த படம் இன்றளவும் ரசிகர்ளின் பேவரைட் படமாக விளங்கி வருகிறது. 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் அட்லீ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கதையை தயார் செய்து இருப்பதாகவும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படம் வசூலில் நல்ல கலெக்ஷன் கொடுத்தாலும் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
அதுமட்டுமல்லாமல், அட்லீ இயக்கும் படங்கள் அத்தனையும் காப்பி , திருட்டுக்கதை என்றெல்லாம் சர்ச்சையில் சிக்கி விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,  ரஜினியியை வைத்து மெகா சூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளது ரஜினி  ரசிகர்களிடையே கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.