அதிர்ச்சியளிக்கும் நயன்தாராவின் கசிந்த புகைப்படம்!


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (15:47 IST)
கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
நயன்தாரா தற்போது நெல்சன் இயக்கும் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கல்லூரி மாணவியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா பள்ளிக்கு செல்வது போல் பையை மாட்டிக்கொண்டு நடந்து செல்கிறார். ஆனால் அவர் நடந்து செல்லக்கூடிய இடம் பள்ளி வாயில் போல உள்ளது.


 
 
இதனால் ஒரு குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அவர் மாணவியாக நடிப்பது உறுதியானாலும், பள்ளி மாணவியா? அல்லது கல்லூரி மாணவியா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :