திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (17:56 IST)

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் ஷகிலா… எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிரபல நடிகையான ஷகிலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

ஒருகாலத்தில் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள்.  மலையாள சினிமா உலகில் அவரின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை துரத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்துக்கு பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அது போன்ற வாய்ப்புகளும் அவருக்கு வருவதில்லை.

இந்நிலையில் அவர் இப்போது விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளிஸ் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அது சம்மந்தமான ப்ரோமோக்கள் இப்போது ஒளிபரப்பாகி வருகின்றன.