cauveri manickam|
Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:25 IST)
மூன்றாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ராயலசீமாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, ‘சயிரா’ என்ற பெயரில் படமாக எடுக்கப்படுகிறது. சிரஞ்சீவியின் 151வது படமான இதில், அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, நாசர் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாகிறது.
மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தில், நயன்தாராவைத் தொடர்ந்து ப்ரக்யா ஜெய்ஸ்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், ‘விரட்டு’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார். கதைப்படி முக்கியமான கேரக்டரில் நடிக்கும் இவர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். அப்படியானால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே ‘நானும் ரெளடிதான்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.