வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:22 IST)

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம்: நயன்தாரா பட இயக்குனர் கைது!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று சட்டமேதை அம்பேத்கர் சிலை பட்டப்பகலில் காவல்துறையினர் முன் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் காவல்நிலையம் உள்பட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 50 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது
 
 
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய இயக்குனர் கோபிநயினார்  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் கோபி நயினாரை கைது செய்தனர்.
 
கைதுப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கோபி நயினார், 'முன்பெல்லாம் கலவரம் என்றால் அதில் வயதான நபர்கள்தான் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், நேற்று கலவரம் ஏற்படுத்திய அனைவருமே இளைஞர்கள். அதுவும் பெரும்பாலும் இரவில்தான் இதுபோலச் சிலைகளை உடைத்திருக்கிறார்கள். முதன்முறையாகப் பட்டப்பகலில் ஒரு சிலையை உடைத்திருக்கிறார்கள். அதுவும் காவல் நிலையம் எதிரிலேயே நடக்கிறது.
 
 
என்ன மாதிரியான நஞ்சு இந்த இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணினாலே அச்சம் விளைவிப்பதாக இருக்கிறது. இது தவறு என்று போராடச் சென்ற எங்களைப் போராடவிடாமல் சிறைப்பிடித்திருக்கிறார்கள்” என்று கூறினார்