செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (18:14 IST)

இரண்டு மாதங்களில் 3 நயன்தாரா படங்கள் ரிலீஸ்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 3 படங்கள், இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.


 


நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள படம் ‘அறம்’. கோபி நைனார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடைய கணவராக விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதர்வா - ராஷி கண்ணா ஆகியோர் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படம், டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது என்கிறார்கள்.

டிசம்பர் 22ஆம் தேதி, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.