அஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் வைரலாகும் புகைப்படம்

Sasikala| Last Modified திங்கள், 30 அக்டோபர் 2017 (13:52 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு  கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளது.

 
பாலிவுட் பிரபலங்கள் தங்களின் படம் ரிலீஸாகும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்நிலையில் சிவகார்திகேயனும், நயன்தாராவும் தர்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு நயன்தாரா தலையில் முக்காடு போட்டும்,  சிவகார்த்திகேயன் தலையில் துண்டு கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
இப்படத்திற்கு விவேகா பாடல் எழுதியுள்ளார். பிருந்தா டான்ஸ் மாஸ்டராக உள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆடும் டூயட் பாடலை படமாக்கவே படக்குழு அஜ்மீர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகரான  ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படம், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸாவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :