1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (14:12 IST)

என்னாது... நயன்தாராவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

நயன்தாராவுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாக, சில  நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.




முன்னணி நடிகையான நயன்தாராவும், இளம் இயக்குநரான விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சிம்பு மற்றும் பிரபுதேவாவுடனான காதல் முறிவைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவனிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறார் நயன்தாரா. தாங்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதை மறைக்க விரும்பாத அவர்கள், இருவரின் பிறந்தநாளின்போதும் மாலத்தீவுகள், அமெரிக்கா என சுற்றுகிற இடங்களைப் புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன், இருவரும் ஒரே ஃபிளாட்டில்தான் சில வருடங்களாக வசித்து வருகின்றனர். லிவிங் டு கெதராக அவர்கள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. கை நிறைய படங்களை வைத்திருக்கும் நயன்தாரா, இப்போதைக்குத் திருமண பந்தத்தில் இணைய மாட்டார் என்றே கூறப்படுகிறது. திருமணமான நடிகைக்கு தமிழ் சினிமாவின் என்ன மரியாதை கிடைக்கும் என்பதை அறியாதவரா நயன்தாரா?