1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (13:08 IST)

உஜாலா விளம்பரத்தில் நடித்து ஊரடங்கில் பணம் சம்பாதிக்கும் நயன்தாரா!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான love action drama என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து தற்ப்போது ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் வருமானமின்றி வீட்டில் முடங்கியிருக்கின்றனர்.

ஆனால், நயனுக்கு மட்டும் எங்கிருந்து தான் வாய்ப்புகள் வந்து குவியுதோ தெரியல.... இந்த ஊரடங்கிலும் தலைவி விளம்பரங்களில் நடித்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். ஆம், தற்போது உஜாலா விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோவை நயன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ujala Crisp and Shine TVC. #Ujala #JyothyLaboratories #Nayanthara

A post shared by