1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (09:43 IST)

என் தங்கமே... ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடுத்து சிரிக்கும் நயன்தாரா - கியூட் வீடியோ!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான  love action drama என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிவின்பாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன் நயன்தாரா அரட்டை அடித்து சிரிக்கும் செம கியூட்டான வீடியோ ஒன்றை அஜுவர்கீஸ் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அழகு நயன்தாராவின் கியூட்டான ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த வீடியோவை ஆளாளுக்கு ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். இதோ அந்த அழகி வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞാൻ മുങ്ങി