வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 5 ஜனவரி 2019 (17:27 IST)

செண்டை மேள எஃபெக்ட்டுடன் வெளியான நயனின் ஐரா டீசர்!

கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தையும் இயக்கிய சர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் டீசர் வெளியாகியுள்ளது. 
 
செண்டை மேள எஃபெக்ட்டுடன் திகில் ஊட்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.