வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (12:58 IST)

நயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்! கடுப்பில் புகையும் ரசிகர்கள்!

நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படத்தை  டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து  ரசிகர்களை செம்ம கடுப்பேற்றியுள்ளார்.  


 
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர். 
 
காதலர் தினமான நேற்று கோலிவுட் ஹாட் ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.  அப்போது எடுத்த ரொமான்டிக் போட்டோக்களை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்திலும் , விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


 
இவர்களின் இந்த புகைப்படத்தை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் மற்றும் நயன்தாராவின் ரசிகர்கள், இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பன்றான்டா என்ற வடிவேலு போட்டோவையும் வெளியிட்டு விக்னேஷ் சிவன் மீதான தங்கள் கடுப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.