1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:46 IST)

முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப்  இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இந்த படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்க உள்ளார்.  ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம் நடத்தி முடித்துவிட்டதால்,  தற்போது ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்துள்ளார். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க அவரிடம் படக்குழு பேசி வருகின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.