1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (22:11 IST)

உன்னால முடியலைன்னா ஷேர் ஆட்டோ புடிச்சு வந்துடு: நயன்தாராவை கலாய்த்த யோகிபாபு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திகில் படமான 'ஐரா' வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தினை விளம்பரம் செய்வதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது
 
இந்த டுவீட்டில் நயன்தாராவும் யோகிபாபுவின் ஓட்டப்போட்டிக்கு தயாராகுவது போல் உள்ளது. அப்போது யோகிபாபு நயன்தாராவிடம், 'அப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என்று சொல்வது போல் அந்த டுவீட் உள்ளது. நயன்தாராவை கலாய்ப்பது போல் உள்ள இந்த டுவீட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையில் 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகிபாபுவின் கலாய்ப்பு நடிப்பை ரசித்த நயன்தாரா இந்த படத்திலும் அவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனரிடம் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது