திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:45 IST)

நான் ஒன்னும் தப்பா பேசல… நயன்தாரா பற்றிய கருத்துக்கு விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் நடிகை நயன்தாரா பற்றிய சமீபத்தில் கூறிய கருத்து பலவகையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் சாகக்கிடக்குற நிலைமையிலும் ஒரு மருத்துவமனை காட்சியில் முழு மேக்கப்புடன் எப்படி நடிக்க முடியும் என விமர்சித்திருந்தார். 

அதற்கு விளக்கமளித்த நயன்தாரா, ஒரு ரியலிஸ்டிக் படமாக இருந்தால், அதன் இயக்குனர் கேட்டால் நான் அவ்வாறு நடித்திருப்பேன். குறிப்பிட்ட அந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதன்படி நடித்தேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மாளவிகா மோகனன், நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீங்க' என்று கண்டித்துள்ளார். மாறாக தீபிகா படுகோன் ஒரு சூப்பர்ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார் இப்படி சொல்லுங்களேன் என கூறியுள்ளார். இதையடுத்து மாளவிகா நயன்தாரா மீது தொடர்ந்து வன்மம் கக்குவதாக சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதற்கு விளக்கமளித்துள்ள மாளவிகா “எனக்கு நயன்தாராவின் மீது மரியாதை உள்ளது. பெண் நடிகைகளை அப்படி தனித்துக் கூறுவது குறித்துதான் பேசி இருந்தேன். சீனியர் நடிகையாக அவர் பயணத்தை வியப்பாக பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.