வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (13:59 IST)

சென்னை வந்த ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா..!

nayanthara
சென்னை வந்த ஷாருக்கானுக்கு நடிகை நயன்தாரா முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பதும் அந்த குழந்தையை பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நயன்தாராவை சந்தித்த ஷாருக்கான் சிறிது நேரம் அவரது வீட்டில் இருந்து அவருடன் பேசியதாகவும் நயன்தாராவின் இரட்டை குழந்தைகளுக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிகிறது. 
 
பின்னர் நயன்தாரா வீட்டிலிருந்து ஷாருக்கான் கிளம்பிய போது அவரை கார் வரை சென்று வழியனுப்பிய நயன்தாரா அவர் காரில் ஏறுவதற்கு முன்பாக முத்தமிட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
நயன்தாரா மற்றும் ஷாருகான் ஆகிய இருவரும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran