வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:43 IST)

காதலர் தினத்தில் மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்! வேலூரில் உருக்கம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை, காதலர் தினத்தன்று  அவரது தானமாக வழங்கிய  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தி சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கோகிலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த வாரம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு கோகிலாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால் , கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது . ஆனாலும் கோகிலா உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.   இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கோகிலா மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார் அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இருதயம் மற்றும் கல்லீரல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 
காதலர் தினத்தில் மனைவியின் இதயத்தை கணவர் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.