வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:35 IST)

நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்!

நடிகர் கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பிக் பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஓடிடியில் வெளியானது. ஆனாலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்புக் காட்சிகளை காட்டி படம் நன்றாக இருக்கிறது என அவர்களை சொல்லவைத்து ஒப்பேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கவினின் அடுத்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கி இருக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.