வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:43 IST)

கவினுக்கு குவியும் அப்லாஸ் ‘லிப்ட்’ திரைவிமர்சனம்!

கவினுக்கு குவியும் அப்லாஸ் ‘லிப்ட்’ திரைவிமர்சனம்!
 
இயக்கம்: வினித் வரப்பிரசாத்
தயாரிப்பு:  லிப்ரா புரொடக்ஷன்
நடிகர், நடிகைகள்: கவின் , அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி 
இசை: பிரிட்டோ மைக்கேல்
ஒளிப்பதிவு: எஸ். யுவா
 
கதைக்களம்: 
 
ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் குரு (கவின்) மற்றும் அதே கம்பெனியில் எச் ஆர்ஆக இருக்கும் ஹரிணி (அம்ரிதா) இருவருக்கும் ஆரம்பத்தில் மோதல் இருந்ததை அவர்களின் பிளாஷ்பேக் மீட்டிங்காக காட்டுகின்றனர். கவின் ஒரு பிராஜெக்டிற்காக பெங்களூரில் இருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை கம்பெனியில் வேலை பார்க்கிறார். 
 
அப்போது இரவு நேரத்தில் ஓவர் டைம் டியூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்ப லிப்ட் ஏறியதும் அங்கு பல அமானுஷயங்கள் நடக்கிறது. இதற்கிடையே ஹீரோயினும் லிப்டில் வர கவின் தான் லிஃப்டை பூட்டி அவரை பயமுறுத்துவதாக ஹரிணி நினைத்து சண்டையிடுகிறார். ஆனால், குரு நான் பூட்டவில்லை இங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கிறது என கூறியும் அதை ஹரிணி நம்பவில்லை. 
உடனே லிப்டில் உண்மையிலே பேய் இருக்கிறதா? என கேம் விளையாடுகிறார்கள். அப்போது பேய் இருக்கிறது என்று தெரிய வருகிறது. உடனே இவர்கள் கம்பெனியிலேயே சுற்றிக் சுற்றிதப்பிக்க அலைகின்றனர். பல மணி நேரம் லிப்ட்டில் கத்தி கதறி போராடுகின்றனர். பிறகு லிப்டிலேயே ஹரிணி மற்றும் குரு இருவரும் 3 மணிக்கு இறந்ததாக டிவியில் செய்திகள் வெளியாகிறது. ஆனால், அப்போது 12 மணி தான் ஆகிறது. இதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பிக்க முடியற்சிக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? அல்லது உண்மையிலே லிப்டில் இறந்துவிட்டார்களா என்பது மீதி கதை. 
 
படத்தின் ப்ளஸ்: 
 
கவின் அம்ரிதாவின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. கவின் சிறந்த நடிகர் என்பதை லிப்ட் படத்தில் நிரூபித்துவிட்டார். 
 
படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம். அமானுஷ்யம், பேய் காட்சிகளில் மைக்கேல் பிரிட்டோ மிரட்டியெடுத்துவிட்டார். 
 
இன்னா மயிலு பாடலுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். 
 
படத்தின் ப்ளஸ்: 
 
படத்தின் திரைக்கதை கொஞ்சம் தொழ்வு உள்ளது. பேய் படம் என்பதால் நிறைய லாஜிக் மீறல்கள் படத்தின்  மைனஸாக பார்க்கப்படுகிறது. இருந்தும் படத்தை கவினின் நடிப்பு திறமைக்காக பார்க்கலாம். ஐடி ஊழியரக்ளுக்கு கொடுக்கப்படும் வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சல் குறித்து இந்த படம் பேசுகிறது பாராட்டத்தக்கது. 
 
படத்தின் மதிப்பு: 4/5