செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (09:40 IST)

தனி விமானத்தில் காதலருடன் சென்ற நயன்தாரா: எங்கு சென்றார்?

nayanthara
பிரபல நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளனர். அவர்கள் கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கொச்சி சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுவதை அடுத்து ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட நயன்தாரா கொச்சி சென்றுள்ளார் என்றும், அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்பது என்றும் அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது