திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (17:32 IST)

இரட்டை வேடத்தில் நயன்தாரா –ஐரா அப்டேட்

நயன்தாரா நடிப்பில் லஷ்மி குறும்படப் புகழ் இயக்குனர் சர்ஜூன் இயக்கும் புதிய படத்திறுக் ஐரா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா எப்போதுமே கதாநாயக நடிகர்கள் எனும் ஒற்றை மையத்தை முன்னிறுத்தியே செயல்பட்டு கொண்டு வந்திருக்கிறது. அதை உடைக்கும் விதமாக அவ்வப்போது சில கதாநாயகிகள் தோன்றுவார்கள். அந்த வரிசையில் வரிசையில் நயன்தாரா தனிக் கதாநாயகியாக நடிக்கும் பல படங்கள் சமீப காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் அந்த படங்கள் பிரபல நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை படைத்து வருகின்றன.

இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அதையடுத்து தற்போது அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. ஐரா என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்தினை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக ராஜேஷ் தயாரிக்கிறார். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி படம் மற்றும் லஷ்மி குறும்பட இயக்குனர் சர்ஜுன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஹாரர் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வர இருக்கிறது.