செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)

விலைபோனது விஸ்வாசம்?

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் விஸ்வாசம் படத்தின் தமிழநாடு திரையரங்க உரிமையை வாங்கியுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்

சிறுத்தை சிவா-அஜித் காம்போவில் நான்காவது படமாக உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. முதலில் தீபாவளி வெளியீடாக இருந்த இப்படம் தமிழ் சினிமா வேலை நிறுத்தம் காரணமாக பொங்கல் ரிலீசாக வரவிருக்கிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை அறம் படத்தின் தயாரிப்பாளர் கோட்டாபாடி ஜே ராஜேஷின் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இதை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தற்போது அறிவித்துள்ளது. இதுவரை வந்த அஜித் படங்களிலேயே விஸ்வாசம் படம்தான்  அதிகப்ட்ச தொகைக்கு விற்கப்பட்டுள்ளது  திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.