1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (15:32 IST)

நயன்தாராவின் 75 ஆவது படத்தின் தலைப்பு இதுவா? வெளியான தகவல்!

நயன்தாராவின் 75 ஆவது படத்துக்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் திருமணத்துக்குப் பின்னர் மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நிலையில் தற்போது அவர் 74 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அவரின் 75 ஆவது படம் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பெண் சமையல் கலைஞரைப் பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்துக்கு ‘அன்னபூரணி’ என்ற தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.