செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (15:31 IST)

நயன்தாரா திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…. முதல்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட விக்கி!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் கடந்த மாதம் 9 ஆம் தேதி நடந்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர்.

அதில் கலந்துகொண்ட பிரமுகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். அவர்தான் மணமக்களுக்கு தாலியை எடுத்துக்கொடுத்தார் என்றும் சொல்லப்பட்டது. திருமணம் சம்மந்தப்பட்ட புகைப்படங்களை இதுவரை வெளியிடாமல் இருந்த தம்பதிகள் இப்போது முதல்முறையாக வெளியிட்டுள்ளனர்.

திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.