செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (19:25 IST)

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்! வைரலாகும் செய்தி!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 


 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அதுமட்டின்றி  சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  "காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை நல்ல விஷயங்களால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். 
 
ஆனால், விக்னேஷ் சிவனிடம் திருமணப்பேச்சு எடுத்தால் உடனே மழுப்பலான பதில் தான். இதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான்.  100 படங்களில் நடித்து முடித்த பின்னர் திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என்பதில் நயன்தாரா உறுதியாக இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் தாயார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி ப்ரஷர் கொடுப்பதாலும், நயனுக்கும் வயதாகி கொண்டே போகிறது என்பதாலும் இந்த திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறதாம். 


 
எனவே, இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டு அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா. இதனால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் ஹாட் செய்தியாக வைரலாகி வருகிறது.