நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்தி சாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான"ரவுது கா ராஸ்"
ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில்,ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பரபரப்பான திரில்லர் படத்தில்,போலீஸ் அதிகாரி தீபக் நேகியாக,பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உத்தரகாண்டில் உள்ள ரௌது கி பெலி என்ற அழகிய கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு வெளியான ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொலையே நடந்திராத ஒரு கிராமத்தில், திடீரென பார்வையற்ற பள்ளியில் வார்டன் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
SHO தீபக் நேகி (நவாசுதீன் சித்திக்) மற்றும் இன்ஸ்பெக்டர் டிம்ரி (ராஜேஷ் குமார்) உள்ளிட்ட அவரது குழு,இந்த மர்மமான கொலை விசாரணையில் இறங்குகின்றனர்.
இத்திரைப்படம் சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையின் தனித்துவமான கலவையைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
கடந்த ஆண்டு 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) பிரீமியரின் போது இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்நிலையில் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது.
இது குறித்து நவாசுதீன் சித்திக் பகிர்ந்து கொண்டதாவது.....
நான் கிரைம் திரில்லர்கர்களின் ரசிகன்,எனவே, இந்தப் படம் ஒரு தனித்துவமான திருப்பத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பார்வையாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். உண்மையில் ரவுது கா ராஸை வேறுபடுத்துவது நகைச்சுவையான கதாபாத்திரங்களும் மற்றும் அசாத்தியமான திரைக்கதையும் தான்.
ஒரு கிராமத்தில் நிகழும் கொலையை, போலீஸ் எவ்வளவு சோம்பேறியாக விசாரிக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது.என்றார்