குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?
அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமாகி வரும் நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லன் வேடத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா வரிசையாக வில்லன் வேடத்தில் நடித்து கலக்கி வரும் நிலையில் இப்போது அஜித்தோடும் இணையவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.