புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (14:15 IST)

ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் - ’’இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி ’’

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. அரசியலுக்கு இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினி கடந்த வருடம் தன் அரசியல் வருகையை உறுதி செய்தார். ஆனால் கமலைப் போல் தனது அரசியல் கட்சியை இன்னும் அறிவிக்கவில்லை என்கிற வருத்தம் அவரது ரசிகர்களிடையே உள்ளது. 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி கூறியதாவது :
 
தேர்தலில் பணக் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்பொது நடக்கிறதோ அப்போது அரசியலுக்கு வருவேன். 
அரசியலுக்கு வருவது எப்போது என்று எழுப்பிய கேள்விக்கு, சட்டமன்றத் தேர்தல் வரட்டும் என்றார்.
 
சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் ஆர்வத்துடன் உள்ள ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார்.
 
மேலும் மோடி மீண்டும் வருவாரா என்ற கேள்விக்கு வரும் 23 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும் அப்போது தெரியும் என்றார்.