வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (12:18 IST)

இயற்கை சார்ந்த வாழ்க்கை: சொந்த ஊரில் நடிகை தேவயானி கட்டியுள்ள பண்ணை வீட்டை பாருங்கள்!

தமிழ் சினிமாவில் பவ்யமான ஹோம்லி நடிகையாக 90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல் , நிகழ்ச்சி போன்ற வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார். 

இவர் பெற்றோர்களை எதிர்த்து இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த தமபதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பல தேவயானி கடந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி அழகான பண்ணை வீடு ஒன்றை கட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் அவரது பண்ணை வீடு இயற்கைகள் சூழ்ந்து அமைந்துள்ளது.அவரின் பண்ணை வீடு புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் வியந்து ரசித்துள்ளனர்.