1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (10:23 IST)

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்!

arun vijay
தமிழ் திரைப்பட நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.


 
தமிழ் சினிமாவில் தடையற தாக்க, யானை, மலை மலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாள் தினத்தன்று  உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மேலும் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் சென்னை  இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  இரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமில்  கலந்து கொண்ட அருண் விஜய் தனது ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

Edit by Prasanth.K