வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (07:02 IST)

'தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? பரவும் வதந்திகள்!

தளபதி விஜய் நடிக்க உள்ள 65வது படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தளபதி 66 படத்தை தேனாண்டாள் முரளி தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன யூடியூபில் பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் சிலர் இந்த வதந்தியை பரப்பி வருகின்றனர் 
 
உண்மையில் தளபதி 66 படம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை தொடங்க வில்லை என்பதும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் என்பது குறித்து விஜய் இன்னும் முடிவு செய்யவில்லை என்பதும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் அவர் ’தளபதி 66’ படத்தின் பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது இந்த நிலையில் தளபதி 66 படம் குறித்து பரவி வரும் அனைத்து ளும் வதந்தியே என்று விஜய் தரப்பிலிருந்து விசாரித்ததில் தெரிய வந்துள்ளது