செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (19:42 IST)

மகிழ்திருமேனியை அடுத்து நடிகராகும் இளம் இயக்குனர்!

நடிகர்கள் இயக்குனராவதும் இயக்குனர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வுதான். ஆனால் சமீபகாலமாக எதிர்பாராத சில இயக்குனர்கள் திடீரென நடிகராகி ஆச்சரியம் அளித்தனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மகிழ்திருமேனி. இவர் விஜய்சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் 'நரகாசுரன்' இயக்குனர் நரேன் கார்த்திகேயனும் தற்போது நடிகராகியுள்ளார். சந்தீப் கிஷான் நடித்து வரும் 'கண்ணாடி' என்ற படத்தில் இயக்குனர் நரேன் கார்த்திகேயன், தெலுங்கு பட இயக்குனர் ஆனந்த் மற்றும் நடிகை மாளவிகா நாயர் ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இவர்கள் மூவரும் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது
 
'கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.